YouTube அறிமுகம் YouTube

ஒவ்வொருவருக்கும் தனது எண்ணங்களை வெளிப்படுத்தும் உரிமையுள்ளது என்றும், மற்றவர்களின் கருத்துகளைக் கேட்பதும், நமது எண்ணங்களை வெளிப்படுத்துவதும், பகிர்ந்துகொள்வதும் அதன் மூலம் ஒரு சமூகத்தை உருவாக்குவதும் உலகை இன்னும் சிறப்பானதாக்கும் என்றும் நம்புகிறோம்.

நான்கு இன்றியமையாத சுதந்திரங்களே எங்கள் மதிப்புகளுக்கான அடிப்படையாகும், இந்த சுதந்திரங்களே நாங்கள் யார் என்பதை வரையறுக்கின்றன.

கருத்து சுதந்திரம்

எல்லோருக்கும் தடையின்றிப் பேசவும் கருத்துகளைப் பகிர்ந்துகொள்ளவும் வெளிப்படையாகப் பேசி விவாதிக்கவும் வாய்ப்பிருக்க வேண்டும் என்றும், படைப்பாக்கம் சார்ந்த இந்த சுதந்திரமே புதிய கருத்துகளையும், புதுப்புது வடிவங்களையும் பலப்பல சாத்தியக்கூறுகளையும் உருவாக்க வழிவகுக்கும் என்றும் திடமாக நம்புகிறோம்.

தகவல் சுதந்திரம்

எல்லோரும் தகவலை எளிதாகவும் தடையின்றியும் அணுக முடியும் நிலை இருக்க வேண்டும் என்பது எங்கள் எண்ணம். கல்வி கற்பிக்கவும் எளிதாகப் புரிந்துகொள்ளவும் உலகில் நிகழும் பெரிய மற்றும் சிறிய நிகழ்வுகளை ஆவணப்படுத்தவும் வீடியோ சிறந்த வழியாகும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.

வாய்ப்பு சுதந்திரம்

தங்களைப் பற்றி உலகம் அறிந்துகொள்ள, பிசினஸை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்றும் எவை பிரபலமாகின்றன என்பதை அவர்களே முடிவுசெய்கிறார்கள் என்றும் நம்புகிறோம்.

சார்ந்திருப்பதற்கான சுதந்திரம்

ஆதரவளிக்கும் சமூகங்களைக் கண்டறியவும், தடைகளைத் தகர்த்தெறியவும், எல்லைகளைக் கடந்து செல்லவும், பிறருடன் ஒத்துப்போகும் ஆர்வத்தையும் ஈடுபாட்டையும் வெளிப்படுத்த ஒன்றிணைந்து செயல்படவும் எல்லோருக்கும் வசதி வாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.

The latest news from YouTube

Visit the YouTube Blog

Trending topics and videos on YouTube

Visit the Trends Blog